விமானப்படையின் விதை தூவலின் ஆறாவது அலை ஆரம்பம்

நவம்பர் 24, 2021
  •  விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் 65,000 விதைகள் தூவல்

சியாம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட வத்தேகம கெபிலித்த அரச வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர், 23) சுமார் 65,000 விதைகளை தூவுவதற்கு இலங்கை விமானப்படையின் எம்ஐ-17 ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை மற்றும் வரையறுகாப்பட்ட மாஸ் கெபிட்டல் நிறுவம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து விமானப்படை மேற்கொண்ட ஆறாவது அலை விதை குண்டுவீச்சு திட்டத்தின் கீழ் இந்த சுற்று விதை தூவல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

70 ஏக்கர் வனப் பகுதியில் இவ்வாறு விதைகள் வீசப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் இந்த பருவமழை காலத்தில் விதைகள் முளைத்து வேரூன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.