இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகள் தேவையுடைய குடும்பங்களுக்கு கையளிப்பு

நவம்பர் 30, 2021

காரைநகர் மற்றும் புத்தூர் பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் இரண்டு புதிய வீடுகள் தேவையுடைய இரண்டு குடும்பங்களுக்கு அன்மையில் இராணுவத்தினரால் கையளிக்கப்பட்டது.

பயனாளிகளான திரு தம்பிராசா மதியழகன் மற்றும் திரு எஸ் சுரேஷ்குமா ஆகியோருக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் புதுமனை குடிபுகு விழாவில் யாழ் பாதுகாப்புப் படைகட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நன்கொடையாளர்களான திரு மற்றும் திருமதி மோகன் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்திற்கு 1வதுவது கஜபா படையணி மற்றும் 10வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி வீரர்கள் தொழில்நுட்ப மற்றும், பொறியியல் மற்றும் மனிதவள பங்களிப்பை வழங்கியதாக இராணுவம் தெரிந்துள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி எளிமையான முறையில் இடம்பெற்ற புதுமனை புகு விழாவில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பிராந்திய அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் படைவீர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.