--> -->

‘குவன் மிதுதம்’ திட்டத்தின் கீழ் விமானப்படையினரால் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

டிசம்பர் 01, 2021

கொத்மலை, புடலு ஓயாவிலுள்ள சுமங்கல ஆரம்பப் பாடசாலை மற்றும் வவுனியா சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஷ்ண வித்தியாலயத்தில் விமானப்படையினரால் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் அண்மையில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டன.

இலங்கை விமானப்படையால் ஆரம்பிக்கப்பட்ட ‘குவன் மிதுதம்’ திட்டத்தின் கீழ் இந்த சமூக சேவை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படையின் பல நோக்கு திட்டத்தின் 20வது கட்டத்தின் கீழ், புடலு ஓயா சுமங்கலா ஆரம்பப் பாடசாலையில் புதிய மின் வடமிடல் உட்பட, பாடசாலையின் குறைநிறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை தெறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு முன்னதாக வவுனியா சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஷ்ணா வித்தியாலயத்தில் 19வது கட்ட திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டது.

இந்த திட்டங்களுக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவு மற்றும் அந்தந்த விமானப்படை சேவை நிலையங்களினால் நிதியுதவியளிக்கப்பட்டன.

மேம்படுத்தப்பட்ட வசதிகள், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் அமைந்துள்ள இவ்விரு பாடசாலைகளின் தகுதியான மாணவர்களுக்கு பாரிய நன்மை பயக்கும் என விமானப்படை மேலும் தெறிவித்துள்ளது.