'பானம' மற்றும் 'பொத்துவில்' பயனாளிகளுக்கு இரண்டு புதிய வீடுகளை இராணுவத்தினரால் கையளிப்பு

டிசம்பர் 04, 2021

இலங்கை இராணுவம் அண்மையில் பானம மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் வசிக்கும் பயனாளிகளுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை வைபவ ரீதியாக கையளித்தது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படையினர் தமது மனிதவளம் மற்றும் சிவில் பொறியியல் நிபுணத்துவத்தையும் விரிவுபடுத்தி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன் பானம மற்றும் பொத்துவில் பகுதிகளில் இரண்டு புதிய வீடுகளை நிர்மாணித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ‘ஒபட கெயக் - ரட்ட ஹெடக்’ வீடமைப்பு திட்டத்தின் கீழ் நீதிதியுதவியளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கமைய, பானமவில் கே.மலேதன மற்றும் பொத்துவில் சித்தி பாத்திமா ஆகியோர் தமது அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து புதிய வீடுகளை பெற்றுக்கொண்டனர்.

பயனாளிகளின் புதுமனை குடிபுகு விழாவில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கலந்துகொண்டு புதிய வீடுகளின் சாவிகளை அந்தந்த பயனாளிகளுக்கு கையளித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களும் அந்தந்த வீடு சூடு விழாக்களில் கலந்து கொண்டனர்.