--> -->

ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் சபுத்தி விளையாட்டு விழாவில் தினேஷ் மற்றும் துலானுக்கு தங்க விருதுகள்

டிசம்பர் 04, 2021

விளையாட்டு அமைச்சு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் சபுத்தி விளையாட்டு விருதுகள் விழாவில் 2020ல் பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற வாரண்ட் அதிகாரி 1 தினேஷ் பிரியந்த மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற கோப்ரல் சமிதா துலான் ஆகியோர் இந்த ஆண்டின் சபுத்தி விளையாட்டு விழாவில் தங்கம் விருது பெற்றனர்.

விருது வழங்கும் விழா இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ. நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

விளையாட்டு துறையில் முன்னணியில் உள்ள விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் சர்வதேச ரீதியில் பாராட்டப்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் பெண்களுக்கு ஆண்டின் சபுத்தி விளையாட்டு தங்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த வருடம் சுசந்திகா ஜயசிங்க இந்த விருதைப் பெற்றிருந்தார். கடந்த பாராலிம்பிக் போட்டிகளில் தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக தினேஷ் பிரியந்த மற்றும் சமிதா துலான் ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராதா விஜேகோன், விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தி சான்ஸ் ஸ்போர்ட்ஸ் கோல்ட் அனுசரணை வழங்கிய இந்த விருது வழங்கும் விழா இரண்டாவது தடவையாக சபுத்தி இலக்கிய வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளையாட்டு இலக்கியம் என்ற தலைப்பில் இலங்கையில் நடைபெறும் ஒரே விருது விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.