--> -->

இலங்கை கடற்படை 71வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

டிசம்பர் 09, 2021

இலங்கை கடற்படை தனது 71வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது.

இதனையொட்டி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதல்களுடன் கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள், சமூக நலன்புரி செயற்பாடுகள் மற்றும் கடற்படை நிகழ்வுகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட ஒரு அரிய வாய்ப்பினை வழங்கும் வகையில் இன்றும் நாளையும் (டிசம்பர்.09&10) காலிமுகத்திடல் கடற்பிராந்தியத்தில் அவைகள் நங்கூரமிட்டு வைக்கப்படவுள்ளன.

நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதான மற்றும் அமைதியான யுகத்தை தோற்றுவித்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கடற்படை முதற்தர பாதுகாப்பு வலயமாக செயற்பட்டது. மேலும் போர் நிறைவடைந்த பின்னர் தேசத்தை கட்டியெழுப்பும் திட்டத்தில் கடற்படை ஒரு பன்முக பங்காற்றி வருகின்றது.

நாட்டின்கடற்பிராந்தியத்தில் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் இலங்கை கடற்படையினரால், பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் ஏனைய தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கண்டறியப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத புலம்பெயர்வு முயற்சிகளை முறியடிக்கவும், அவ்வாறானவர்களை கைது செய்யவும் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடிக்கவும் முடிந்தது.

இயற்கை அனர்த்தங்கள் மற்றும் ஏனைய அவசரகால நிலைமைகளின் போது மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படை, பெறுமதிமிக்க உதவிகளை வழங்குவதோடு கடல் மற்றும் கரையோர பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடற்படையினரின் தொழிநுட்ப நிபுணத்துவத்துடன் நிறுவப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நாட்டின் கிராமப்புறங்களில் நாள்பட்ட சிறுநீரக நோய் அதிகமாக உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குகின்றன.

இலங்கை கடற்படை தொண்டர் படையானது 1937ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் இலங்கையின் பிரித்தானிய தொண்டர் ஒதுக்குப் படையாக பிரித்தானிய கடற் படையினரின் கீழ் உள்வாங்கப்பட்டது. இலங்கை கடற்படை வரலாற்றின் திருப்புமுனையாக ஒரு புதிய அத்தியாயம் 1950 ம் ஆண்டு டிசம்பர், 09ம் திகதி பிரித்தானிய இலங்கை கடற்படை நிறுவப்பட்டது. முதலாம் குடியரசு யாப்பின் பிரகாரம் 22ம் திகதி மே மாதம் 1972ம் ஆண்டு பிரித்தானிய இலங்கை கடற்படையானது இலங்கை கடற்படை என பெயர் மாற்றம் பெற்றது.