--> -->

விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி இந்தியா பயணம்

டிசம்பர் 10, 2021

கடந்த புதன்கிழமையன்று (08) ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று (டிச.10) புது தில்லிபுறப்பட்டுச் சென்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனரல் ராவத் மற்றும் அவரது மனைவி திருமதி மதுலிகா ராவத் ஆகிய இருவரின் உடல்களும் பிரார் சதுக் மயானத்திற்கு தகனக் கிரிகைகளுக்காக கம்ராஜ் மார்க்கில் உள்ள அவர்களின் இல்லத்தில் இருந்து அங்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மறைந்த ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கு டெல்லி கன்டோன்மென்டில் நடைபெறும் என இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.