--> -->

சர்வதேச கடற்பிராந்தியத்தில் சுமார் 250 கிலோ போதைப்பொருட்களுடன் வெளிநாட்டு மீன்பிடிகப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

டிசம்பர் 11, 2021

சர்வதேச கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேடதேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு மீன்பிடி கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது. இதன்போது வெளிநாட்டு சந்தேக நபர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பாரியளவிலான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு தெற்கே சுமார் 900 கடல் மைல்கள் (சுமார் 1665கி.மீ) தொலைவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் தொடர்ச்சியான கண்காணிப்பிற்குப் பின்னர், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் உதவியுடன் கடற்படை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கப்பலும் வெளிநாட்டு சந்தேக நபர்களும் தற்போது கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

ஒன்பது சாக்குப் பைகளில் 225 போதைப்பொருள் பொதிகள் பொதிதியிடப்பட்டிருந்தன. இப்பொதிகளின் நிறை 250 கிலோ கிராமிற்கும் அதிகமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது .

சந்தேக நபர்களுடன் அடுத்த சில நாட்களில் குறித்த வெளிநாட்டு கப்பல் கரைக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.