--> -->

பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021 இல் விமானப்படைவீரர்கள் பிரகாசிப்பு

டிசம்பர் 15, 2021

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி-2021இல் விமானப்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தலைநகர் உஸ்பெக்கில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு விமானப்படை பளுதூக்கும் வீரர்கள் வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்துள்ளதாக விமானப்படை தகவகள் தெரிவிக்கின்றன.

ஆண்களுக்கான 67 கிலோ எடைபிரிவில் போட்டியிட்ட விமானப்படை வீரரான மனோஜ் விஜேசிங்க 254 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்ற அதேவேளை பெண்களுக்கான 59 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட பெண் பளுதூக்கும் விமானப்படை வீராங்கனையான நதீஷானி ராஜபக்ஷ மொத்தம் 164 கிலோ எடையினை தூக்கி வெண்கலப் பதக்கத்தை தனதாக்கி கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய சாம்பியன்ஷிப் மற்றும் ஐடபிள்யூஎஃப் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக இலங்கை பளுதூக்குதல் சம்மேளனத்தால் 20 பேர் கொண்ட பளுதூக்கும் வீரர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.