ஊடக அறிக்கை

டிசம்பர் 25, 2021

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து பங்களாதேஷுக்கான கடல் பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசரநிலையை எதிர்கொண்ட பாரிய படகு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த படகு அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களில் வெளியிடப் பட்டுள்ள உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

இதேவேளை, திருகோணமலையில் உள்ள விக்டரி ஏஜென்சீஸ் எனும் உள்ளூர் கப்பல் முகவர் மூலம் எரிபொருள் வழங்கப்பட்டதையடுத்து அந்த படகு அதன் இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது.

எனவே, இதுபோன்ற போலியாள தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.