--> -->

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புகளை கடற்படை தொடர்கிறது

டிசம்பர் 28, 2021

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னெடுப்புக்களின் ஒரு பகுதியாக கடற்படையினரால் பானம  மற்றும் அதனை அண்டியுள்ள சதுப்பு நிலப் பரப்புக்களில் கண்டல் தாவரங்கள் உட்பட  1200 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மர நடுகை திட்டம் நேற்றையதினம் (டிசம்பர், 27) முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய, பானம  மற்றும் அதனை அண்டியுள்ள சதுப்பு நிலப் பரப்புக்களில் 500 கண்டல் தாவரங்கள்,  700 பனிச்சை, இலுப்பை, மருது, கொன்றை மற்றும் நாக மரக்கன்றுகள் கடற்படையினரால் நடப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டம், கடற்படையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தென்கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய  மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, தலைமன்னாரில் உள்ள கடற்படை வீரர்கள் உருமலை முதல் தலைமன்னார் வரையிலான கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமையன்று  (டிசம்பர், 26) கடற்கரை யை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கொண்டனர். கடற்கரையில் தேங்கும்  பிளாஸ்டிக் மற்றும் திண்மக்கழிவுகளை அகற்றுவதன் மூலம் கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சித்திட்டம், வட மத்திய கடற்படை கட்டளையகத்தின் கட்டளைத்தளபதி  ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.