--> -->

நீர்க்கசிவு ஏற்பட்ட குளக்கட்டு இரானுவத்தினரால் புனரமைப்பு

ஜனவரி 05, 2022

அண்மையில் பெய்த கன மழை காரணமாக பக்மீகம கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பக்மீகம குளத்தின் குளக்கட்டில் ஏற்பட்ட நீர்க்கசிவு புனரமைப்பு செய்யப்பட்டது.

குறித்த விடயம் படையினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து 22 வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரவின் பணிப்புரைக்கமைய நீர்க்கசிவு ஏற்பட்ட குளக்கட்டு மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

223 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நதீக குலசேகர, 6 வது இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் பி.ஏ.ஆர். விஜேரத்ன, மற்றும் படையினர் இந்த புனரமைப்பு பணிகளில் கலந்துகொண்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.