முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களுக்கு இராணுவத்தினரால் அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பு

ஜனவரி 06, 2022

லவ்ட் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் இராணுவத்தினரால் முல்லைத்தீவில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கு அத்தியாவசிய வீட்டுப்பாவனைப் பொருட்களுடன் ஒரு தொகுதி உலருணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது.

இதற்கமைய, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 59வது படைப்பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக பாரதி சிறுவர் இல்லம் மற்றும் லதானி சிறுவர் இல்லத்திலுள்ள உள்ள 115 சிறுவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்பு செய்யட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இந்த நன்கொடைப் பொருட்களில் மின்சார உபகரணங்கள், அணிகலன்கள், உடைகள், உலர் உணவுப் பொதிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கியிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சி.டி.சூரிய பண்டார, லவ்ட் சேரிட்டி தொண்டு நிறுவனத்தின் முகாமையாளர் திரு பசிந்து மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.