குட்டிகலை பிரதேசத்தில் இராணுவத்தினரால் மர முந்திரிகை செய்கை

ஜனவரி 07, 2022

ஏற்றுமதிக்கான பயிர்செய்கையை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவித்து, அந்நிய செலாவணியை ஈட்டும் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவப் பொதுச் சேவைப் படையணியினால், குட்டிகலை பிரதேசத்தின் உள்ள படைமுகாம் வளாகத்திற்குள் சுமார் 700 முந்திரிகை மரக்கன்றுகளை நடுகை செய்யும் திட்டம் ஆரம்பித்து வைக்க க்கப்பட்டது.

இந்த திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் முதற்கட்டமாக இராணுவப் பொதுச் சேவை படையணியின் கேர்ணல் நிலை கட்டளைத்தளபதி பிரிகேடியர் பாலித ஹேவாவசத்தின் வழிகாட்டுதளுக்கு அமைய 3 ஏக்கர் நிலப்பரப்பில் 210 கன்றுகளை நடுகை செய்யப்பட்டன. மீதமுள்ள கன்றுகள் எஞ்சிய 7 ஏக்கரில் பரப்பில் இலங்கை முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அனுசரணையுடன் அடுத்த சில நாட்களுக்குள் நடுகை செய்வதற்கு எதிர் பார்க்க படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிகழ்வு, 1வது இராணுவப் பொதுச் சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்ணல் சி.எஸ். தேமுனி, குட்டிகலை, இராணுவப் பொதுச் சேவை படையணியின் பிரிவு கட்டளை அதிகாரி மேஜர் கே.டி கோரகபிட்டிய ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்றதாகவும் இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.