கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுப்பு

ஜனவரி 11, 2022

இலங்கை கடற்படையினரால் உஸ்வெட்டகையாவ பிரதேசத்தில் அண்மையில் (ஜனவரி, 09) கடற்கரையை சுத்தப்படுத்தும் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடற்படை தொண்டர் படையின் வருடாந்த முகாமையொட்டி இந்த சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படை தொண்டர் படையின் 2022ம் ஆண்டுக்கான வருடாந்த முகாமில் கலந்துகொள்ளும் கடற்படை வீரர்கள் உஸ்வெட்டகையாவ கடற்கரையை பிளாஸ்டிக் மற்றும் இதர திண்மக்கழிவு மாசுக்களிலிருந்து சுத்தப்படுத்தும் இந்த சமூக சேவை முயற்சியில் கலந்துகொண்டதாக அது கூறுகிறது.

கடற்படை தொண்டர் படையானது, தேசிய அவசர மற்றும் அனர்த்த காலங்களில் நிபுணத்துவம் மற்றும் மனித வளம் மூலம் அவசியமான உதவிகளை வழங்குவதற்கு கடற்படை பயிற்சியுடன் தயாராக உள்ள கடற்படையின் முக்கிய பிரிவாகும்.

சேவையில் இணைத்துக்கொள்ளப்படாத கடற்படை தொண்டர் படைவீரர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்த வருடாந்த மற்றும் வாராந்த பயிற்சி நிகழ்ச்சிகளை கடற்படைத் தலைமையகம் நடாத்தி வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக ரியர் அட்மிரல் சேனகே செனவிரத்னவின் வழிகாட்டலின் கீழ் இந்த சுத்திகரிப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.