முல்லைத்தீவில் 100 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் பாடசாலைக் காலணிகள் அன்பளிப்பு

ஜனவரி 18, 2022

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 100 ஏழை மாணவர்களுக்கு பாடசாலைக் காலணிகளை இராணுவம் அண்மையில் அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட பிராந்திய பாடசாலைகளின் மாணவர்களுக்கு முல்லைத்தீவில் உள்ள படையினரால் முல்லைத்தீவு வித்யானந்தா கல்லூரி வளாகத்தில் வைத்து இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவில் உள்ள படையினரின் கோரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பிற்கு அமைய தனியார் நிறுவனம் ஒன்று இந்த திட்டத்திற்கு அனுசரணை வழங்கியது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் 59 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி 591 மற்றும் 592 ஆவது பிரிகேட்களது தளபதிகள் ஆகியோர் இந்த அன்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிகழ்வில் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.