10 மில்லியன் ரூபா பெறுமதியான செயற்கை கால்களை அங்கவீனமுற்ற 167 படை வீரர்களுக்கு வழங்க ஏற்பாடு

ஜனவரி 25, 2022

ரணவிரு சேவா அதிகார சபை அங்கவீனமுற்ற 167 படைவீரர்களுக்கு 10 மில்லியன் ரூபா செலவில் செயற்கை கால்களை வழங்கும் முதற்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய, நாடு முழுவதிலுமுள்ள அங்கவீனமுற்ற படை வீரர்களின் தேவைக்கமைய தயாரிக்கப்பட்ட 152 செயற்கை கால்களை ரணவிரு சேவா அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டது.

படைவீரர்களின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட செயற்கை கால்களின் தரத்தை கண்காணித்தல் மற்றும் அவற்றை மாவட்ட மட்டத்திற்கு அனுப்பி வைத்தல் தொடர்பாக திட்டமிடல் கலந்துறையாடல் இடம்பெற்றது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் மற்றும் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை பின்னரான பிரிவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது அவர், அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கான உதவி உபகரணங்களை குறுகிய காலத்திற்குள் மாவட்டங்களுக்கு வழங்குவதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக புனர்வாழ்வு மற்றும் பிந்தைய சிகிச்சைப் பிரிவு அதிகாரிகளின் செயற்பாடுகளை பாராட்டியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு செயற்கை கால்களை விநியோகிக்கும் முதற்கட்ட செயற்திட்டத்தின் கீழ் இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 118 பேருக்கு ரணவிரு சேவா அதிகாரசபையில் கடமையாற்றும் ஆயுதப்படை உறுப்பினர்களின் பங்களிப்புடன் 2022 ஜனவரி 20 விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.