--> -->

சிறைச்சாலைககளில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிக்க இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகம் - பாதுகாப்பு செயலாளர்

ஜனவரி 26, 2022
  • இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை வீரர்கள் 194 பேர் சிறைச்சாலை சேவையில் இணைவு
  • பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறுவோரின் மரியாதை அணிவகுப்பில் பாதுகாப்பு செயலாளர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு  


சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை முறியடிப்பதற்கும், இவற்றுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மிகவும் வெளிப்படையான அணுகுமுறையில் கட்டுப்படுத்துவதற்கும் 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' அறிமுகப்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளரும், ஒழுக்கமான, நல்லொழுக்கமுள்ள மற்றும் சட்டங்களை மதித்து நடக்கும் பிரஜைகள்   தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஜனவரி 26) தெரிவித்தார்.  

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ் சிறைச்சாலை நடைமுறையில் மறுசீரமைப்பை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' என்ற கருத்தாக்கம் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டவாறு பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், மற்றும் சட்டத்தை மதித்து நடக்கும் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள திருத்தங்கள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்ற ‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை’யில் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறும் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வில் ஜெனரல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதியான ஜெனரல் கமல் குணரத்னவை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய வரவேற்றார்.

‘இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறும் 194 பேரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் அங்கு மேலும் உரையாற்றுகையில் "இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படையில் 500 வீரர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக இன்றைய தினம் 194 படைவீரர்கள் தமது பயிற்சியினை பூர்த்தி செய்து வெளியேறுகின்றனர் எனக் குறிப்பிட்டார்.

"ஊழல் மற்றும் தவறான நடத்தைகளை முறியடிக்கவும், மேலும் வெளிப்படையான அணுகுமுறையில் பிரச்சினைகளை கட்டுப்படுத்தவும் இவர்கள் துணை நிற்பார்கள் என இந்த நடவடிக்கையின் நோக்கத்தை அவர் விளக்கினார்.

புதிதாக வெளியேறிய இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், "உங்கள் உள்ளார்ந்த ஒழுக்கம், தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நீங்கள் அனைவரும் பணியமர்த்தப்பட்டு பயிற்சி பெற்றுள்ளீர்கள், எனவே சிறைக் கைதிகளைக் கையாளும் போது சுய ஒழுக்கத்துடன் மனிதாபிமான அணுகுமுறையுடன் உங்கள் பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

"இந்தக் கைதிகள், அவர்களின் சிறைக் காலத்தை முடித்து மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைக்கப்படுவதற்கு முன்னராக பயனுள்ள நபர்களாக மாற்றுவதில் உங்கள் முயற்சிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது" என அவர் வலியுறுத்தினார்.

வெகு விமர்சையாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளருக்கு 'இலங்கை சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை' படையின் உத்தியோகபூர்வ சின்னம் வழங்கப்பட்டதுடன், பயிற்சி மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் காட்சிகள், அணிவகுப்பு மற்றும் நான்கு மாத பயிற்சியின் போது சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, இந்நிகழ்வில், சிறைச்சாலைகள் மேலதிக ஆணையாளர் நாயகம் துசித உடுவர, சிறைச்சாலைகள் ஆணையாளர் (நிர்வாகம், புனர்வாழ்வு மற்றும் திறன் அபிவிருத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க, சிறைச்சாலைகள் ஆணையாளர் (விநியோகம் மற்றும் சேவைகள்) சுனில் கொடித்துவக்கு, சிறைச்சாலைகள் ஆணையாளர் (தொழில்துறை மற்றும் அபிவிருத்தி) மாலின் லியனகே, சிறைச்சாலைகள் பயிற்சி பணிப்பாளர் சேனக பல்லேதன்ன, SPEAT படையின் கட்டளை அதிகாரி சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகர் பிரசாத் பிரேமதிலக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அதிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.