--> -->

யாழ் போதனா வைத்தியசாலையில் படையினரால் இரத்த தானம்

பெப்ரவரி 05, 2022

யாழ் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட இரத்த இருப்பின் குறைவினையடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 55 ஆவது படைப் பிரிவு படையினரால் இரத்த தானம் வழங்கப்பட்டது.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் வழிகாட்டுதலுக்கமைய ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் 552வது படைப் பிரிவின் 120 இற்கும் மேற்பட்ட படை வீரர்கள் பங்குபற்றியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.