--> -->

யாழில் பாதுகாப்பு படையினரால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

பெப்ரவரி 09, 2022

சுகாதார அதிகாரிகளின் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைய யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு படையினர், ஆகையால் நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் என்பவற்றை முன்னெடுத்தனர்.

யாழ் பாதுகாப்பு படை 51வது பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் 14வது கஜபா ரெஜிமென்ட் படையினர், யாழ் குடாநாட்டில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த திட்டத்தை முன்னெடுத்ததாக நஇராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.