--> -->

கிளிநொச்சி ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

பெப்ரவரி 10, 2022

கிளிநொச்சியில் உள்ள படையினர் பிராந்தியத்தில் உள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கு அண்மையில் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர். கிளிநொச்சியில் வசிக்கும் தகுதியுடைய 42 குடும்பங்களுக்கு வாரயிறுதியில் (பெப்ரவரி, 05) கண்ணன் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் தனவந்தர்களின் நிதியுதவியுடன், அரிசி, பருப்பு, பால்மா, தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய ஒவ்வொன்றும் சுமார் ரூ. 2750.00 பெறுமதியுடைய பொதிகள் வழங்கப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க மற்றும் 57வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தனவின் வழிகாட்டுதலுக்கமைய இந்த சமூக நலத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநகர், இளமந்தலாறு மற்றும் பணிக்குளம் கிராமசேவை பிரிவுக்குட்பட்ட அந்தந்த கிராம உத்தியோகத்தர்களின் ஆலோசனைக்கமைவாக பயனாளிகள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.