--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்கா லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

பெப்ரவரி 14, 2022

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமெரிக்காவின் லா ஜொல்லா கல்வி நிறுவனத்துடன் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
 
"தொற்று நோய் மற்றும் தடுப்பூசியில் டெங்கு வைரஸ் மற்றும் மைக்கோபக்டீரியம் காசநோய் போன்ற நோய் வெளிப்பாடுகளின் போது மனித நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வாதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

இந்த கூட்டு மருத்துவ ஆராச்சி ஒப்பந்தத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வைத்திய பீடத்தின் பீடாதிபதி டொக்டர் அருண தர்ஷன் டி சில்வா, அப்பல்கலைக்கழகம் சார்பில் லா ஜொல்லா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
 
தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலத்திரனியல் முறைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.