--> -->

இராணுவ வைத்தியசாலைகளில் 50 புதிய இராணுவ தாதியர்கள் சேவை தொடங்க உள்ளனர்

பெப்ரவரி 17, 2022

அனுராதபுரம் இராணுவ தாதியர் பாடசாலையில் பொது தாதியியலில் மூன்று வருட நிபுணத்துவ டிப்ளோமா பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 50 தாதியர்கள் தமது சேவை அடையாளமன தாதி தொப்பியினை பெற்றுக்கொண்டனர்.

இவர்களுக்கான தொப்பி அணிவிக்கும் நிகழ்வு அனுராதபுரம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.

தாதியர்களுக்கான தொப்பி அணிவிக்கும் நிகழ்வில் இராணுவ வைத்திய சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கே.பி.என் பத்திரன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சுகாதார அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சிவில் மாணவ தாதியர்கள், அரச தாதியர் பாடசாலைகள், சுகாதார அமைச்சு, அனுராதபுரம் போதனா வைத்திசாலை மருத்துவ அதிகாரிகள் மற்றும் தாதியில் மற்றும் சுகாதாரம் என்பவற்றில் நிபுணக்கம் மிக்க இராணுவக் கல்வியியல் அதிகாரிகள் ஆகியோரினால் பயிற்றுவிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சினால் நடாத்தப்பட்ட முதலாம் வருடப் பரீட்சையை வெற்றிகரமாக முடித்த மாணவர் தாதிகள் தொழில்முறை தொப்பியுடன் முடிசூட்டப்படுவார்கள் என்றும், பின்னர் அவர்கள் அதிதிகள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யத் தகுதி பெறுவார்கள் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.