--> -->

இலங்கையில் உள்ள ‘அவுஸ்திரேலிய இல்லத்தில்’ 107வது (அன்சக் போர்வீரர் நினைவேந்தல் நடைபெற்றது

ஏப்ரல் 26, 2022

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ராணுவப் படைகளின் (அன்சக்) 107வது ஆண்டு நினைவு தினம் நேற்று (ஏப்ரல் 25) ‘ஆஸ்திரேலியா இல்லத்தில்’ நடைபெற்றது.

முதலாம் உலகப் போரில் சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் உறுப்பினர்களைக் கொண்ட ‘அன்சக்’ தலைமையிலான நேச நாட்டுப் படைகளின் போர் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற தியாகங்களையும் நினைவுகூரும் வகையில் 'அதிகாலை பிரார்தனை’ நடத்தப்பட்டது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையை தளமாகக் கொண்ட தூதரகங்களின் உயர்ஸ்தானிகர்கள்,தூதுவர்கள், இராஜதந்திரிகள், விசேட அதிதிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதுடன், இலங்கையின் முப்படைகளின் சார்பாக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் என இலங்கை இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வின் போது அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் ஹோலி மற்றும் நியூசிலாந்திற்கான உயர் ஸ்தானிகர் அதிமேதகு மைக்கேல் எப்பில்டன் ஆகியோரின் அழைப்பின் பேரில், விசேட அதிதிகள் கொடிக்கம்பத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவப் படைகள் (அன்சக்) தினம் 1916 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் தேதி நினைவுகூரப்படுகிறது. துருக்கியுடனான போரின் போது நேச நாட்டுப் படைகளிள் (அன்சக்) பல ஆஸ்திரேலிய வீரர்கள் துருக்கியில் உள்ள கலிபோலியிலிருந்து நேச நாட்டுப் படைகள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர்.

1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது கண்டியில் இருந்து ஒரு சுயேச்சை படைப்பிரிவான அப்போதைய சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் குழு ஒன்று எகிப்துக்குச் சென்றது மேலும் ஏப்ரல் 1915 இல், சிலோன் பிளாண்டர்ஸ் ரைபிள் படையணியின் மற்றொரு குழு துருக்கியில் 1 வது அன்சக் அணியினருடன் இணைந்ததாகக் கூறப்படுகிறது, என இராணுவ வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.