--> -->

வானிலை அறிக்கை

மே 04, 2022

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (மே 04) நண்பகல் 1200 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று மேற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 20-40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.