--> -->

சர்வதேச கடற்பரப்பில் பெருமளவான போதைப் பொருட்களை கடற்படையினரால் பைப்பற்று

மே 09, 2022

ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 240 கிலோ கிராம் போதைப் பொருள் இலங்கை கடற்படையினரால் (SLN) தெற்கு பிராந்தியத்திற்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் அண்மையில் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்படை ஊடக தகவல்களுக்கமைய, கடற்படையின் ரோந்துக் கப்பலான SLNS சயுரல மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது, தெற்கு கடற்கரையிலிருந்து 630 கடல் மைல் (1166km) தொலைவில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டு பல் நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்துள்ளது.

படகில் தேடுதல் நடத்திய கடற்படையினர் ஏழு வெளிநாட்டு பிரஜைகளுடன் சுமார் 240 கிலோ போதைப் பொருட்களை கைப்பற்றியதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. எட்டு மூட்டைகளில் அடைக்கப்பட்ட 220 பொட்டலங்களில் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போதைப்பொருளுடன் மேற்படி மீன்பிடி படகு சர்வதேச கடற்பரப்பில் வைத்து கடத்தல்காரர்களால் போதைப்பொருளை நாட்டினுள் கடத்துவதற்காக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என கடற்படை சந்தேகிக்கின்றது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் தெரு மதிப்பு சுமார் ரூ.4800 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சந்தேக நபர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.