--> -->

மோசமடையும் கடல் வானிலை- வானிலை மையம்

மே 17, 2022

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (17) விடுத்துள்ள கடல்சார் வானிலை முன்னறிவிப்பிற் கமைய அடுத்த 24 மணித்தியாலங்களில் பின்வரும் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் மேற்படி கடற்பரப்புகளில் அலைகள் 2.0 - 2.5 மீற்றர் வரை வீசக்கூடும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் ஒரு சில இடங்களில் மாலை/இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். மேலும், காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.