--> -->

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

ஜூன் 07, 2022

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழு எயார் கொமடோர் அக்தார் இம்ரான் சத்தேசய் தலைமையில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்னவை ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) இடம்பெற்றது.

பாதுகாப்புச் செயலாளருக்கும், பாகிஸ்தான் தூதுக் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது சுமூக கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாளருக்கும் எயார் கொமடோர் அக்தார் இம்ரான் சத்தேசயிக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் சப்தார் கான் ஆகியோர் கலந்துகொண்டார்.