--> -->

தேசிய இரத்த வங்கிக்கு இலங்கை இராணுவ வீரர்கள் இரத்த தானம் செய்தனர்

ஜூன் 08, 2022

அண்மையில் நடைபெற்ற இரத்ததான முகாம் ஒன்றில் பெருமளவான இலங்கை இராணுவப் படையினர் இரத்த தானம் செய்தனர். இலங்கை இராணுவ ஊடகங்களின் படி, 120 இராணுவ மற்றும் இராணுவத்தில் சேவையாற்றும் சிவில் உறுப்பினர்கள் மத்திய இரத்த வங்கிக்கு இந்நிகழ்வின் போது இரத்தம் வழங்கினர்.

 14 ஆவது படைப் பிரிவின் 144 ஆவது படைத் தலைமையகத்தின் 10 இலங்கை தேசியக் காவற்படை (SLNG) துருப்புக்களின் ஏற்பாட்டைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நாரஹேன்பிட்டியில் உள்ள அபிநவராம விகாரையில் இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில், நாரஹேன்பிட்டியில் உள்ள மத்திய இரத்த வங்கியின் உதவியுடன் இந்த இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

இலங்கை இராணுவ துருப்புக்கள் வழமையாக இதுபோன்ற இரத்த தான நிகழ்ச்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பாடு செய்து, சுகாதார த் துறையினருக்கு மருத்துவமனைகளில் போதியளவு இரத்த இருப்புக்களை சேமிப்பில் வைக்க உதவியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.