--> -->

அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் தலைமையில் திருகோணமலை கடற்கரையை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

ஜூன் 09, 2022

ரணவிரு சேவா அதிகார சபையின் கிழக்கு மாகாண கிளை மற்றும் திருகோணமலை மாவட்ட கடல்சார் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து "தூய்மையான கரங்களால் தூய்மையான நாட்டை கட்டியெழுப்புவோம்" எனும் தொனிப்பொருளில் அண்மையில் சுற்றுப்புற சூழல் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியொன்று திருகோணமலை "பழைய ஜெட்டி" கடற்கரையில் நடைபெற்றது.

 திருகோணமலை பிரதேச யுத்த வீரர் அமைப்பின் உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை அரசாங்க அதிபர் பி.எஸ்.என். ஜெயவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராஜ், ரணவிரு சேவா அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் குணதாச ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

எரிபொருள் பாவனையற்ற, கட்டுமரம் சார்ந்த மீன்பிடி முயற்சிக்கு உத்வேகத்தை வழங்குவதன் மூலம் கரையோரத்தை சுத்தப்படுத்துவதில் தீவிர பங்களிப்பு செய்தமைக்காக வேலைத்திட்டத்தில் பங்குகொண்ட மீன்பிடி மற்றும் கடற்றொழில் முயற்சியாளர்கலான அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் அரச அதிபரின் பாராட்டை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.