--> -->

யுத்த வீரரின் தாய்க்கு ரணவிரு சேவா அதிகார சபையினால் வீடு அன்பளிப்பு

ஜூன் 15, 2022

சேவையில் ஈடுபட்டிருந்த வேலை உயிரிழந்த ஒரு யுத்த வீரரின் தாய்க்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்று ரணவிரு சேவா அதிகாரசபையினால் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.

 அதன்படி, ஜே எஸ் டப்ளிவ் நிறுவனத்தின் தலைவர் (JSW Apparel) சமல் டி மெல் அவர்களின் நிதி அனுசரணையில் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைகள் படைப்பிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு, ஹொரண தொம்பகொடவில் வசிக்கும் 19 வது கெமுனு காவற்துறையின் கோப்ரல் கவீந்திரலால் சேனாதீரவின் தாயார் திருமதி S. G. கல்யாணவதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

திருமதி கல்யாணயாவதி தனது குடும்பத்தினருடன் வசித்த வீடு கடந்த ஆண்டில் (2021) மண்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளது.

திரு.சமல் டி மெல், அதிகாரசபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு), மற்றும் திருமதி கல்யாணயாவதியின் குடும்ப உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.