--> -->

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

ஜூன் 15, 2022

பங்களாதேஷ் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் இப்னே பஸால் ஷெய்குஸ்ஸமான் அவர்கள் இன்று (ஜூன் 15) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் வைத்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது, இலங்கை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் முயற்சிகளை பாராட்டிய மேஜர் ஜெனரல் ஷெய்குஸ்ஸமான், இக்கல்லூரி கற்றல் மற்றும் பயிற்சிக்கான உகந்த சூழலைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஜெனரல் ஷெய்குஸ்ஸமானின் கருத்துக்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் நிறைவில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் மேஜர் ஜெனரல் ஷெய்குஸ்ஸமான் ஆகியோர் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்துகொண்டார்.