--> -->

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் சேவையை நிறைவு செய்யும் அதன் கட்டளை தளபதி செயலாளரை சந்திப்பு

ஜூன் 17, 2022

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் (DSCSC) சேவையை நிறைவு செய்து விடைபெறும் அதன்  கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் இன்று (ஜூன் 17) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்னவை சந்தித்து பிரியாவிடை பெற்றார்.

அதன் போது நடந்த சுமுகமான கலந்துரையாடலில் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவர்களின் சேவைகளைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவரது இராணுவ வாழ்க்கையில் பல கட்டளை, பயிட்சி மற்றும் நிர்வாக நியமனங்களில் சேவையாற்றியுள்ளதுடன் போரின் போது காயமடைந்துள்ளதால் ‘தேச புத்திர பதக்கம்’ பெற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் 35 ஆண்டுகால இராணுவப் பணியை முடித்துக் கொண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலைத் தொடர்ந்து, நிகழ்வைக் குறிக்கும் வகையில் பாதுகாப்பு செயலாளரும் மேஜர் ஜெனரல் நிஷாந்த ஹேரத் அவர்களும் நினைவுச்சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.