இலங்கை விமானப்படையின் நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு திட்டம் ஆரம்பம்

ஜூன் 18, 2022

இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் அனைத்து விமானப்படை நிறுவனங்களையும் உள்ளடக்கி நகர்ப்புற விவசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டமொன்று அண்மையில் (ஜூன் 16) ஆரம்பிக்கப்பட் டது.

'நிவஹனட அஸ்வென்ன' (வீட்டுக்கு அருவடை) எனும் கருப்பொரு ளில், விமானப்படை பொது சேவை குடியிருப்புகள் மற்றும் இருப்பிடப் பகுதிகளில் காய்கறிகளை பயிரிடுதல், இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏட்படுத்தல் இதன் நோக்கமாகும்.

இதன்படி, விமானப்படை குவன்புர பொது சேவை அலுவலக வளாகத்தில் மரக்கறி கன்றுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டதுடன், விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சார்மினி பத்திரனாவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது என விமானப்படை தெரிவித்துள்ளது.