--> -->

தெதுரு ஓயாவில் குப்பைகளை அகற்ற இலங்கை கடற்படை உதவி

ஜூன் 27, 2022

புத்தளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை கடற்படையினர் புத்தளம், அனவிலுந்தாவை பிரதேசத்தில் தெதுரு ஓயா ஆற்றில் அடைபட்டிருந்த குப்பைகளை அகற்றினர்.

குப்பைகள் அடைப்பட்டு ஆற்றின் நீரோட்டம் மந்தமடைந்து பிரதேசத்தின் விவசாய நீர்ப்பாசனம் பாதிப்பி ற்குள்ளாகி இருந்தது.

கடற்படையின் முயற்சியால் ஆற்றின் நீரோட்டம் வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பிரதேச பயிர் நிலங்களுக்கு தேவையான நீர் தடையின்றி கிடைப்பதும் தாழ்வு நிலப் பகுதிகள் வெள்ளத்திள் மூழ்கும் அபாயமும் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வடமேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவின் வழிகாட்டலின் கீழ் வடமேற்கு கடற்படைப் கட்டளை பிரதேச சுழியோடும் பிரிவினால் இந்தப் பணி மேட்கொள்ளப்பட்டது.