--> -->

நிராவிய சோளம் பயிரிடும் திட்டத்தின் முதல் கட்டம் இராணுவத்தினாரால் துவக்கி வைப்பு

ஜூன் 28, 2022

இலங்கை இராணுவம் (SLA) அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு அமைவாக முதல் கட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடும் திட்டம்  தம்புத்தேகம நிராவிய இராணுவப் பண்ணையில் நேற்று (ஜூன் 27) ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு சோளக் கன்றுகளை நட்டி அந்நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர்களால் இப்பயிர்ச்செய்கையை பராமரிக்கப்படுவதுடன், கலா ஓயா பள்ளத்தாக்கின் நீர் வளங்களிலிருந்து நீர்பாசனம் செய்யப்படும்.

இராணுவத்தினரால் மொத்தம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மேட்கொள்ளப்படவுள்ள  இப்பயிர்ச்செய்கை அரசாங்கத்தின் விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய அதிகாரிகளின் அறிவுரைகளுக்கமைய இராணுவத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை இயக்குனரகத்தினால்  மேற்கொள்ளப்படவுள்ளது.

இராணுவத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை இயக்குனரகத்தின் இயக்குனர், பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ உட்பட பல மூத்த அதிகாரிகள் விழாவில் கலந்துக்கொண்டனர்.