--> -->

யாழ்ப்பாணத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு இலங்கை இராணுவத்தினால் புதிய வீடு அன்பளிப்பு

ஜூலை 26, 2022

இலங்கை இராணுவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி, சந்திரபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பமொன்றிற்கு அண்மையில் புதிய வீடொன்றை நிர்மாணித்து கையளித்தது.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் (SFHQ-J) 52 படைப்பிரிவின் கீழ் 523 பிரிவின் 4 மற்றும் 7 ஆவது விஜயபாகு காலாட்படை துருப்புக்கள், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தமது தொழில்நுட்ப மற்றும் மனிதவள திறனை உபயோகித்து இவ்வீட்டின் நிர்மாண பணிகளை மேட்கொண்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ் ‘சத்திய ஸ்ரீ’ அமைப்பின் திரு.வி.மனோகரன் அவர்களின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வீடு, திருமதி நாகமணி சரஸ்வதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அக்குடும்பத்திற்கு தேவையான உலர் உணவு உட்பட அத்தியாவசிய வீட்டுப் பாவனை பொருட்கள்,குழந்தைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகளும் அன்பளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

வீடு கையளிப்பு நிகழ்வின் போது மூத்த அதிகாரிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.