அமைச்சின் புதிய மேலதிக செயலாளர் - பாதுகாப்பு நியமனம்

ஆகஸ்ட் 02, 2022

திரு. ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க நேற்று (ஆகஸ்ட் 01) பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்- பாதுகாப்பு பதவிக்கு  நியமிக்கப்பட்டார்.

நேற்று அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடமிருந்து திரு. ரத்நாயக்க தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

புதிய பதவியை பொறுப்பேற்பதற்கு முன்பு அவர் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை மற்றும் திட்டமிடல் மேலதிக செயலாளராக கடமையாற்றினார்.

இதற்கு முன் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் - பாதுகாப்பு நியமத்தை வகித்த திரு. பி பி எஸ் சி நோனிஸ் சுங்க பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.