--> -->

புதிய பணிப்பாளர் நாயகம் - திட்டமிடல் நியமனம்

ஆகஸ்ட் 15, 2022

பாதுகாப்பு அமைச்சின் புதிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகமாக திரு. அனுர ரணசிங்க இன்று (ஆகஸ்ட் 15) நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களிடமிருந்து திரு.ரணசிங்க தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

திரு.ரணசிங்க இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தர உத்தியோகத்தர் என்பதுடன் அரச சேவையின் 28 வருடகாலம் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.