--> -->

விமானப்படைப் படையின் பிரதம அதிகாரி நியமனம்

செப்டம்பர் 14, 2022

இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபகஷ கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபகஷ அவர்கள் தனது நியமனக் கடிதத்தை விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் சுதர்சன பத்திரனவிடமிருந்து செவ்வாய்க்கிழமை (செப் 13) பெற்றுக்கொண்டார்.