--> -->

நாட்டின் வளர்ச்சிக்கு சிவில் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிவரும்
பங்களிப்பினை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்டினார்.

செப்டம்பர் 24, 2022

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொளரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்கள் மொரட்டுவையிலுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு (செப்.22) விஜயம் செய்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு மேற்கொண்ட முதலாவது விஜயம் இதுவாகும்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வருகைதந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை அதன் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமைகள் மற்றும் அதன் எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் சிவில் பாதுகாப்பு திணைக்களம் நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரத்திற்கு வழங்கிவரும் மகத்தான பங்களிப்பிற்காக தனது பாராட்டினை தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அவர்கள் (சிபாதி) தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டிவைத்தார்.