--> -->

இலங்கை கடற்படையின் பெண் சுழியோடிகளுக்கான பயிற்சி

செப்டம்பர் 27, 2022

இலங்கை கடற்படையின் மூன்று பெண் பணியாளர்கள் அடங்கிய குழு முதன்முறையாக அடிப்படை சுழியோடிகளுக்கான பயிற்சிநெறியை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுழியோடுதல் பயிற்சியில் ஈடுபட ஆர்வமுள்ள கடற்படைப் பெண்களுக்கான வாய்ப்பை உருவாக்குவதற்காக இந்தப் பயிற்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒரு பெண் மாலுமி உட்பட மூன்று பெண் பயிற்சியாளர்களைக் கொண்ட குழு திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் உள்ள கடற்படையின் சுழியோடுதல் பயிற்சி பாடசாலையில் இம்மாதம் (செப்டம்பர் 05) முற்பகுதியில் ஆரம்பமான 20 நாள் சுழியோடிகளுக்கான பயிற்சி பாடநெறியை நிறைவுசெய்ததாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (செப். 24) கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியின் கட்டளைத் தளபதி கொமடோர் டேமியன் பெர்னாண்டோ தலைமையில் அக் கல்லூரியில் நடைபெற்றது.

மேலும், எதிர்காலத்தில் அவர்களின் சுழியோடுதல் நிபுணத்துவத்தின் அடிப்படையில் தேவைக்கேற்ப சுழியோடுதல் நடவடிக்கைகளுக்காக அனுப்ப கடற்படை எதிர்பார்f;கிறது.