--> -->

சுவிட்சர்லாந்து தூதுக்குழு யாழ்ப்பாண விஜயத்தின்போது யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு விஜயம்.

செப்டம்பர் 30, 2022

சுவிட்சர்லாந்து தூதுக்குழு வடக்கிற்கான சுற்றுப்பயணத்தின் போது யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு புதன்கிழமை (28) விஜயம் மேற்கொண்டுள்ளனர். இவ் விஜயத்தின் போது, சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பிரதி தூதுவர் திரு ரவுல் இம்பாச்> பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர் திரு கவுடென்ஸ் ரஸ்ட்>  சிரேஷ்ட தேசிய திட்ட அதிகாரி திருமதி சுஷாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்.பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் சுவிஸ் தூதுக்குழுவினருடன் அவரது அலுவலகத்தில் ஒரு சுருக்கமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டார். இதன் போது யாழ் கட்டளைத் தளபதி தூதுக்குழுவினருக்கு யாழ்ப்பாணத்தின் தற்போதைய நல்லிணக்கத் திட்டங்கள்>  சமூக-அபிவிருத்தி>  புனர்வாழ்வு>  புனரமைப்பு மற்றும்  பாதுகாப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தார்.

அத்துடன்>  யாழ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதான பதவி நிலை பிரிகேடியர் ஜெனரல் மற்றும் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரதான பதவி நிலை கேணல் ஜெனரல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நன்றி - www.army.lk