--> -->

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் வடமேல் மாகாணத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய பிரிவு நிறுவப்படும் - பாதுகாப்பு செயலாளர்

ஒக்டோபர் 05, 2022

•    கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் முழு அளவிலான கணனி கற்கைகள் பீடம் ஆரம்பித்து வைப்பு

வடமேல் மாகாணத்திலுள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவை புதிதாக நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சூரியவெவயிலுள்ள தெற்கு வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கணனி கற்கைகள் பீடத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இன்று (ஒக்டோபர் 05) அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தெற்கு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், மேற்படி பல்கலைக்கழகத்தின் சேவைகளை பாராட்டியதுடன், அதன் கொள்கைகளை மறுசீரமைப்பதன் மூலமும், அதன் வரம்பெல்லையை மேலும் விஸ்தரிப்பதன் மூலமும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் அனைத்து கல்வி மற்றும் ஆராய்ச்சி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.

மேலும், இந்த பல்கலைக்கழகத்தின் வசதிகளை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் பல்கலைக்கழகம் விரைவான முன்னேற்றத்தை அடையமுடியும் எனவும் தெரிவித்தார்.

ஒரு பல்கலைக்கழகம் அதன் அறிவை விரிவுபடுத்தும் திறனைத் தாண்டி, அதன் மாணவர்களுக்கு பொருத்தமான திறன்கள், சரியான அணுகுமுறைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வசதிகளை வழங்குதல், எதிர்காலத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சூழல்களில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

பாதுகாப்பு பல்கலைக்கழகம் எப்பொழுதும் அதன் மாணவர்கள் வளர்ச்சியில் நடைமுறை அறிவை மேம்படுத்துதல் மற்றும் சரியான அணுகுமுறைகள் மற்றும் மனநிலைகளை வளர்ப்பதில் மிகவும் தேவையான திறன்களை மேன்படுத்துவதில் கவனம் செலுத்ததுவதில் உரிய தீர்மாணங்களை எடுத்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

புதிதாக நிறுவப்பட்டுள்ள கணணிப்பொறியியல் பீடம் இத்துறையில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு நல்ல பல வாய்ப்புகளை வழங்குகிறது.

மேலும் இப்புதிய பீடமானது, திறன்மிக்க இளம் பட்டதாரிகளுக்கு தரமான கல்வி மற்றும் பயிற்சியை வழங்குவதற்கான அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இப் பாதுகாப்பு பல்கலைக்கழகமானது அதன் தொடக்கத்திலிருந்தே மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன், நாட்டின் ஒரு சிறந்த கல்வி நிறுவனமாகவும் உள்ளது என்றார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையின் தலைவரான ஜெனரல் குணரத்ன மேலும் உரையாற்றுகையில், உலகின் மிகவும் மதிப்புமிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 4 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

டைம்ஸ் அட்டவணைப்படுத்தல் 2022டின் படி, இந்த பல்கலைக்கழகம் கல்வியின் தரத்தில் இலங்கையில் 2வது இடத்தையும், நாட்டின் ஒட்டுமொத்த தரவரிசையில் 4வது இடத்தையும் உலகளவில் 801 தொடக்கம் 1000 தரத்திலும் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகத்தின் வளங்கள், கலாசாரம் மற்றும் அதன் கல்வித்தரத்தை மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் வாழ்க்கை அபிலாஷைகளை மேம்படுத்துவதற்கு சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் அவர் மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் தெற்கு பல்கலைக்கழகத்தின் முதல்வர் மேஜர் ஜெனரல் ரொபின் ஜயசூரிய ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் வரவேற்பு மற்றும் அறிமுக உரை நிகழ்த்திய உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், "சிவில் மாணவர்கள் மற்றும் இராணுவக் கெடட்கள் ஒன்றிணைந்து கல்வி கற்பது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதொரு சேர்க்கையை உருவாக்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, பாதுகாப்பு செயலாளருக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரினால் நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டதுடன் பாதுகாப்பு செயலாளர் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு அவரினால் எழுதப்பட்ட ஒரு தொகை புத்தகங்களை அன்பளிப்புச் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் பல்கலைக்கழக தெற்கு வளாகத்தின் வசதிகளையும் பார்வையிட்டார்.

இதேவேளை, வகுப்றைகளுக்கு விஜயம் செய்த பாதுகாப்புச் செயலாளர், மாணவர்களுடன் உரையாடியதுடன் பல்கலைக்கழகத்திற்கான தனது விஜயத்தை நினைவுகூரும் வகையில் மரக்கன்று ஒன்றையும் நட்டினார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, விமானப் படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, அமைச்சின் அதிகாரிகள், மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் மேஜர் ஜெனரல் லால் குணசேகர, பல்கலைக்கழக நிர்வாக, கல்வி மற்றும் கல்விசாரா அதிகாரிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெருந்திரளான கெடெட் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.