--> -->

எகிப்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஒக்டோபர் 12, 2022

இலங்கைக்கான எகிப்து தூதுவர் அதிமேதகு  மகெட் மொஸ்லே இன்று (அக்டோபர் 12) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் எகிப்திய தூதுவர் மொஸ்லே ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துதல், மற்றும் பயிற்சி உதவிக்கான வழிகள் குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.