--> -->

'பவர்டி டு ப்ரொஸ்பெரிட்டி' புத்தகம் வெளியீடு

ஒக்டோபர் 14, 2022

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் இன்று (ஒக்டோபர் 13) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ‘பவர்டி டு ப்ரொஸ்பெரிட்டி’ (வறுமையிலிருந்து செழுமை நோக்கி) என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வெளிவிவகார அமைச்சர் கௌரவ. அலி சப்ரி பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ. பந்துல குணவர்தன கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்ஷ மற்றும் விரிவுரையாளர், பொறியியலாளர் மற்றும் விஞ்ஞான எழுத்தாளருமான சானுக வத்தேகம ஆகியோரால் எழுதப்பட்ட இந்நூலின் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகள் இரண்டும் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் தென் கொரியாவின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எழுதப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது இரு எழுத்தாளர்களும் புத்தகத்தின் பிரதிகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளரிடம் வழங்கினர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.