--> -->

வெளிநாட்டில் உள்ள முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு

நவம்பர் 09, 2022

சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக 2022.11.15 ஆம் திகதி முதல் 2022.12.31 ஆம் திகதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை வெளிநாடுகளில் உள்ள முப்படை வீரர்களும் பயன்படுத்தலாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2022.10.25 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் உரிய முறையில் விடுமுறை பெறாத முப்படை வீரர்கள் தங்களது சேவையில் இருந்து உரிய முறையில் விடுவிப்பு பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு விடுவிப்பு பெரும் வீரர் ஒருவர் ஏதேனும் தொகை செலுத்த நிலுவை இருப்பின் மாத்திரம் அவற்றை உரிய முறையில் செலுத்திவிட்டு தனக்கான விடுவிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாரு சட்ட ரீதியில் விலகிச் செல்பவர்களுக்கு எதிராக வேறு எந்தவொரு ஒழுக்காற்று விசாரணைகள் நிலுவையில் இருக்கக் கூடாது.

மேலும், இவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை அல்லது வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை மோசடியாகத் தயாரிக்கவில்லை என்பது குடிவரவுத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.