--> -->

கடலோர பாதுகாப்பு படையினரால் வடமாகாண பொதுமக்களுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பில் தெளிவூட்டல்

செப்டம்பர் 02, 2019

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினர் கடந்த வாரம் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியானதொரு உயிர்காப்பு விழிப்புணர்வு நிகழ்சித்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இந் நிகழ்சித்திட்டமானது, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலுக்கு அமைய 'ரட்ட வெனுவென் எக்கட சிட்டிமு' எனும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்சித்திட்டங்களை இலங்கை கடலோர பாதுகாப்ப்பு படையின் உயிர்காப்பு கல்லூரியின் நடமாடும் பயிற்சி குழுவினரால் கடந்தமாதம் (ஆகஸ்ட்) 24ஆம் திகதியிலிருந்து 25, 26, 28 மற்றும் 29ஆம் திகதிவரை வெற்றிலைக்கேணி, பருத்தித்துறை, காரைநகர், ஊர்காவற்துறை, நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, நீர் பாதுகாப்பு, நீரில் மூழ்குவதை தடுத்தல் மற்றும் முதலுதவி ஆகியன குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. மீனவ சமூகங்களுக்கு விழிப்பூட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இக்கருத்தரங்கில் சுமார் 350க்கும் அதிகமான மக்கள் பயன்பெற்றனர்.

இக் கருத்தரங்கிற்கு, ஜனாதிபதி செயலகத்தின் பிரதிநிதிகள், மாவட்ட அரச அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.