--> -->

'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' ஒத்திகை பயிற்சி நடவடிக்கையில் கப்பல் மற்றும் கைதிகள் படையினரால் மீட்பு

செப்டம்பர் 05, 2019

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் மின்னேரியாவில் செவ்வாய்கிழமை (செப்டம்பர், 03) ஆரம்பமான களமுனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி X - 2019' நடவடிக்கைகள் தொடர்ந்தும் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வருகின்றன. இதன்பிரகாரம் முப்படை வீரர்களின் பங்கேற்புடன் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பல் மற்றும் அதிலுள்ள சிப்பாய்களை மீட்டெடுக்கும் வகையிலான ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகள் நேற்று (04) திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைமுகத்தில் இடம்பெற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவம் மற்றும் கடற்படையினர் சிறைப்பிடிக்கப்பட்ட 22 சிப்பாய்களை மீட்டெடுப்பதை இவ் ஒத்திகை பயிற்சி நடவடிக்கையில் கான்பித்துள்ளதுடன், பயங்கரவாதிகளால் தடுத்துவைக்கப்பட்ட இவர்களில் அதிகமானோர் வெளிநாட்டவர்களாவர். மேலும் இதன்போது, கமாண்டோ படையினர், கடற்படையின் சிறப்பு படகு படையனியுடன் இணைந்து, எட்டு பேர் கொண்ட ஆறு குழுக்களாக மோப்ப நாய்களுடன் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள், அல்லது வெடிபொருட்கள் ஆகியவற்றை தேடும் வகையில் இவ்ஒத்திகை பயிற்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். இதன்போது கமாண்டோ படையினரின் தடுத்துவைக்கப்பட்டவர்களை எவ்வித பாதிப்பும் ஏற்படாதவண்ணம் விடுவிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்ட அதேவேளை வான் வழி கண்காணிப்பில் பெல் 212 உலங்குவானூர்தி ஈடுபடுத்தப்பட்டது.

முப்படையினரும் ஒருங்கிணைந்து பத்தாவது முறையாகவும் நடைபெறும் இவ்வருடாந்த களமுனை கூட்டு பயிற்சியில், 2400 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள் மற்றும் 200 விமானப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இவ்வருட களமுனை பயிற்சியில் மலேசியா, மாலைத்தீவு, நேபாளம், ரஷ்யா, அமெரிக்கா, பங்களாதேஷ், சீனா, பிரான்ஸ், இந்தியா, ஈரான், பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் சாம்பியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 100ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இக் களமுனை பயிற்சியினை அவதானிக்க கூட்டுப்பயிற்சியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் வருகைதந்தனர்.