--> -->

இலங்கை இராணுவத்தின் 70வது ஆண்டு தினம் இன்று

ஒக்டோபர் 10, 2019

இலங்கை இராணுவம் தனது 70வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர்.10) கொண்டாடுகிறது. இராணுவத்தின்   70வது ஆண்டு நிறைவையொட்டி  சர்வமத நிகழ்வுகள் பல இடம்பெற்றன. ராணுவ கொடிகளுக்கு ஆசீர்வாதம்  பெற்றுக்கொள்ளும்  பிரதான சமய  நிகவுகளின் தொடர்  கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதம் (செப்டம்பர்,28 ) ஆரம்பமானது.

மூன்று தசாப்தங்களாக நாட்டில் புரையோடி காணப்பட்ட   பயகரவாதத்திற்கு எதிராக போரிட்டு வெற்றிகண்ட இலங்கை இராணுவத்தின் குறித்த இவ் 'இராணுவ தினம்' முக்கிய மைல் கல்லாகும்.

இராணுவ தினத்தினை முன்னிட்டு  அதன் பிரதான  கொண்டாட்ட நிகழ்வுகள் காலிமுக திடலில் இன்று இடம்பெற்றது.

காலிமுக திடலில் இன்று இடம்பெற்ற  பிரதான  கொண்டாட்ட நிகழ்வு,  இலங்கை இராணுவத்தின்  23வது  இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல்  ஷவேந்திர சில்வா டப்டப்வி ஆர்டப்பி ஆர்எஸ்பி வீஎஸ்வீ யூஎஸ்பி என்டீசி பிஎஸ்சி அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இராணுவத்தின் 23 வது தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா  மனிதாபிமான நடவடிக்கைகளின் போது முக்கிய பங்கு வகித்த ஒரு திறமையான இராணுவ அதிகாரி ஆவார். அவர்  2019, ஆகஸ்ட் 18ம் திகதி  ஜனாதிபதியால் இராணுவ தளபதியாக  நியமிக்கப்பட்டார்.

1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி  சிலோன் இராணுவம் என ஆரம்பிக்கப்பட்ட  இராணுவத்தின் முதலாவது நிரந்தர படைக்கு  பிரிகேடியர் ஆர். சின்கிளேயர் கட்டளை வழங்கினார். பின்னர் தியதலாவையில் தனது சொந்த இராணுவ கலாசாலை நிறுவப்பட்டதன் மூலம், சிலோன் இராணுவத்தின் முதல் இலங்கை இராணுவ தளபதியாக பிரிகேடியர் அன்டன் முத்துகுமார் அவர்கள் நியமிக்கப்பட்டார்.  24 படைப்பிரிவுகளை கொண்டுள்ள இலங்கை இராணுவத்திற்கு இதுவரை 23 இராணுவ தளபதிகள் கட்டளை வழங்கியுள்ளனர்.

2009ஆம் ஆண்டு மே மாத காலப்பகுதியில் சமாதானமான யுகத்தை நாட்டினுள் ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் இலங்கை இராணுவம், நல்லிணக்க செயற்பாடு மற்றும் தேசிய அபிவிருத்தி என்பவற்றை இலக்காக கொண்ட  ஒரு புதிய பாணியில் பயணிக்க ஆரம்பித்தது. மேலும், இலங்கை இராணுவம், வெளிநாடுகளில் அமைதி காக்கும்  பணியல் ஈடுபடும் ஐ. நா. அமைதி காக்கும் படைக்கும் தனது கணிசமான  பங்களிப்பினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.